முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவரின் கொலைக்கு பழிக்குப்பழியா..? மதுரை நீதிமன்றத்தில் 3 பேர் சரண்..!

0 1856
முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவரின் கொலைக்கு பழிக்குப்பழியா..? மதுரை நீதிமன்றத்தில் 3 பேர் சரண்..!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை இரட்டைக் கொலை வழக்கில், மூன்று பேர் மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

உடையனாம்பட்டி ஊராட்சி முன்னாள் ஊராட்சி மன்றதலைவர் ராக்கம்மாள், கடந்த மார்ச் மாதம் குடும்பப் பிரச்னைக் காரணமாக உறவினர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவரது கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த உடையனாம்பட்டியை சேர்ந்த சபரிமலை மற்றும் அவரது உறவினர் ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் நகர் புறவழிச்சாலையில் உள்ள புதர்காட்டில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி, இரட்டைக் கொலை தொடர்பாக உடையனாம்பட்டியைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

இதனிடையே, இரட்டைக் கொலையில் தொடர்புடையதாக கூறப்படும், முகேஷ்குமார், சூர்யபிரகாஷ், ஜெயபிரகாஷ் ஆகியோர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments