ஜார்ஜ் ஹாட்ஸை டுவிட்டரில் பணியமர்த்தினார் எலான் மஸ்க்

17 வயதிலேயே, ஆப்பிளின் சிம் லாக் தொழில்நுட்பத்தை ஹேக் செய்து, ஐபோன்களை ஜெயில் பிரேக் செய்ததன்மூலம் பிரபலமான ஜார்ஜ் ஹாட்ஸ் என்பவரை, எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தில் பணியமர்த்தியுள்ளார்.
இதற்குமுன், டெஸ்லா நிறுவனத்தில் அவரை பணியில் அமர்த்த நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, எலான் மஸ்க்குடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால், டெஸ்லா கார்களின் ஆட்டோ பைலட் அம்சத்தை பிரதிபலிக்கும் மென்பொருளை பிற கார்களுக்காக அவர் வெளியிட்டிருந்தார்.
அண்மையில், ஆயிரக்கணக்கான டுவிட்டர் ஊழியர்களை எலான் மஸ்க் வெளியேற்றியதற்கு ஜார்ஜ் ஹாட்ஸ் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது டுவிட்டரின் search engine -ஐ மேம்படுத்த, 12 வாரங்களுக்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
Comments