அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு..!

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
உரும்கி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 15வது மாடியில் நேற்றிரவு பற்றிய தீ, மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments