ஜாமீனில் வெளிவந்தவர் உள்பட 2 பேர் கழுத்தறுத்து கொலை.. தலைமறைவாக உள்ள கொலையாளிக்கு போலீசார் வலைவீச்சு..!
ஜாமீனில் வெளிவந்தவர் உள்பட 2 பேர் கழுத்தறுத்து கொலை.. தலைமறைவாக உள்ள கொலையாளிக்கு போலீசார் வலைவீச்சு..!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கொலை வழக்கில் வெளிவந்தவர் உள்பட இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த ராக்கம்மாள் என்பவர் கொலை வழக்கில் கைதான சபரிமலை என்பவர் பிணையில் வந்து தனது உறவினரான ரத்தினவேல்பாண்டியன் என்பவர் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில் காட்டுப்பகுதியில் சபரிமலை மற்றும் ரத்தினவேல்பாண்டியன் இருவரின் சடலங்களும் கிடைப்பதாக நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கழுத்தறுக்கப்பட்டும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட அவர்களின் உடல்கள் பிணக்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டன.
பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments