கோவிலுக்கு சுவாமி கும்பிட சென்ற போது பரிதாபம்.. இரு சக்கர வாகனம் மீது கார் மோதி தாய்-மகள் உயிரிழப்பு..!
கோவிலுக்கு சுவாமி கும்பிட சென்ற போது பரிதாபம்.. இரு சக்கர வாகனம் மீது கார் மோதி தாய்-மகள் உயிரிழப்பு..!
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தாய், மகள் உயிரிழந்தனர்.
கூடுவாஞ்சேரி விஸ்வலிங்கபுரத்தை சேர்ந்த உமாமகேஷ்வரி மற்றும் அவரது மகள் கிருத்திகா ஆகியோர் நேற்றிரவு கோவிலுக்கு செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
தாம்பரம் மார்க்கமாக வண்டலூர் மேம்பால இறக்கத்தில் சென்ற போது அடையாளம் தெரியாத இனோவா கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட தாய், மகள் இருவரும் உயிரிழந்தனர்.
Comments