கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் மிக வயதான 26 வயது இங்கிலாந்து பூனை..!

இங்கிலாந்தில் உள்ள காப்பகத்தில் பராமரிக்கப்படும் 26 வயது பூனை உலகின் மிக வயதான பூனை என கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
ஃப்லாசி எனப்பெயரிடப்பட்டுள்ள அந்த பூனை, 24 ஆண்டுகளாக பெண் மருத்துவ பணியாளர் ஒருவரிடமும், அவரது மறைவிற்கு பின் அவரது சகோதரியிடமும் வளர்ந்து வந்தது.
செவித்திறனை இழந்து, பார்வை குறைபாடுடன் பரிதவித்துவரும் அந்த பூனை தற்போது வயதான பூனைகளுக்கான காப்பகத்தில் பராமரிக்கப்பட்டுவருகிறது.
வழக்கமாக பூனைகள் 12 வயது முதல் 18 வயது வரை உயிர்வாழக்கூடிய நிலையில், இந்த பூனை 27 வயதை நெருங்கியுள்ளது. மனிதன் 120 ஆண்டுகள் வரை வாழ்வதற்கு சமமாக இது கருதப்படுகிறது.
Comments