இந்தோனேஷியாவை உலுக்கிய நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை 268 ஆக உயர்வு.. மீட்புப் பணிகள் தீவிரம்!

இந்தோனேசியாவில் திங்கட்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 268 ஆக அதிகரித்துள்ளது.
மேற்கு ஜாவா மாகாணத்தில் சியாஞ்சூர் நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 5.6 அலகுகளாக பதிவானது.
பூமிக்கு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் நகரமே குலுங்கி, ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகளில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், காணாமல் போன 151 பேரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments