உலகக்கோப்பையில் வெற்றி பெற வேண்டி மெக்சிகோவில் குழந்தை ஏசு சிலைக்கு கால்பந்து அணி ஜெர்சியை அணிவித்த ரசிகர்கள்..!

உலகக்கோப்பையில் வெற்றி பெற வேண்டி மெக்சிகோவில் குழந்தை ஏசு சிலைக்கு கால்பந்து அணி ஜெர்சியை அணிவித்த ரசிகர்கள்..!
மெக்சிகோவில் குழந்தை ஏசு சிலைக்கு, அந்நாட்டு கால்பந்து அணியின் ஜெர்சியை அணிவித்து, ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
டகுபா என்ற நகருக்கு அருகேயுள்ள சான் மிகுவல் ஆர்கேஞ்சல் என்ற தேவாலயத்தில், உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தங்கள் அணி வெற்றிப்பெற வேண்டி பலர் பிரார்த்தனை செய்தனர்.
1970ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரின்போதும், அங்கு கால்பந்து ரசிகர்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்வது வழக்கம் என கூறப்படுகிறது.
Comments