உரிமையாளர் செல்லும் பேருந்தை 6 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்ற வளர்ப்பு நாய்களின் பாச போராட்டம்..

0 2243
நீலகிரி மாவட்டம் உதகையில் உரிமையாளர் செல்லும் பேருந்தை துரத்தி செல்லும் 3 வளர்ப்பு நாய்களின் பாச போராட்டம் குறித்த காட்சிகள் வெளியாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையில் உரிமையாளர் செல்லும் பேருந்தை துரத்தி செல்லும் 3 வளர்ப்பு நாய்களின் பாச போராட்டம் குறித்த காட்சிகள் வெளியாகியுள்ளது.

உதகை காந்தல் பகுதியை சேர்ந்த ரவிக்குமார், 3 நாய்களை வளர்த்து வரும் நிலையில், மார்க்கெட் பகுதியில் தினக்கூலி வேலை செய்து வருகிறார்.

இவர் நாள்தோறும் பேருந்தில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். அப்போது, அவரது 3 வளர்ப்பு நாய்களும் எதையும் பொருட்படுத்தாமல் ஆறு கிலோமீட்டர் தூரம் பேருந்தின் பின் ஓடி சென்று ரவிக்குமார் வேலை செய்யும் இடத்திற்கு செல்கின்றன. இதனை வாகன ஓட்டிகள் வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments