2-வது டி-20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி..!

நியூசிலாந்துடனான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2-வது போட்டி நியூசிலாந்தில் உள்ள மவுண்ட் மாங்கானுவில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்று நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடி சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 51 பந்துகளுக்கு 111 ரன்கள் குவித்தார்.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள் 18.5 ஓவர்களில் 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். இந்திய அணி தரப்பில் தீபக் ஹூடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Comments