15 மணி நேரம் தொடர்ந்து ட்ரம்ஸ் வாசிக்கும் 16 வயது சிறுவன் மேற்கொண்டுள்ள உலக சாதனை முயற்சி..!

0 4645

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து 15 மணி நேரம் டிரம்ஸ் வாசித்து உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள 16 வயது சிறுவன் அதிகாலை 5 மணி முதல் தொடர்ந்து டிரம்ஸ் வாசித்து வருகிறான்.

பொன்னேரியை சேர்ந்த ரமேஷ்-ஜெயந்தி தம்பதியரின் மகன் முகேஷ் கிருஷ்ணன் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுவயது முதலே டிரம்ஸ் வாசிப்பில் ஆர்வம் கொண்ட சிறுவன் முழுமையாக பயிற்சி பெற்று 8 கிரேடு டிஸ்டிங்ஷன் பெற்றுள்ளார்.

ஏராளமான இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ள சிறுவன், நீண்டநேரம் டிரம்ஸ் வாசித்து உலக சாதனை புரியும் நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த சாதனை முயற்சி இன்று இரவு 8 மணிவரை தொடர்ந்து நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments