ஆம் ஆத்மி கட்சி அமைச்சருக்கு மசாஜ் செய்த வீடியோ கசிந்தது குறித்து அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்..!

டெல்லி திகார் சிறையில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்யப்படும் வீடியோ வெளியான நிலையில், வீடியோ கசிந்தது எப்படி என கேட்டு அமலாக்கத்துறைக்கு, டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஊடகங்களுக்கு வீடியோவை கசியவிட்டதாக குற்றஞ்சாட்டிய சத்யேந்தர் ஜெயின் தரப்பினர், அமலாக்கத்துறை மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
வழக்கு தொடர்பான ஆதாரங்கள் வெளியாகாது என அமலாக்கத்துறை உறுதிமொழி அளித்த நிலையில், வீடியோ கசிந்தது தொடர்பாக வரும் 21-ம் தேதி பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இதனிடையே, முதுகுவலிக்கு சத்யேந்திர ஜெயினுக்கு பிசியோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவே வெளியாகியிருப்பதாக துணை முதலமைச்சர் மணிஸ் சிசோடியா தெரிவித்தார்.
Comments