மாணவர்கள் இருவரிடையே ஏற்பட்ட மோதல்.. கீழே தள்ளி விட்டதில் வலிப்பு ஏற்பட்டு பிளஸ் 2 மாணவர் உயிரிழந்த பரிதாபம்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, அரசு பள்ளி மாணவர்கள் இருவரிடையே ஏற்பட்ட மோதலில், ஒரு மாணவர் உயிரிழந்தார்.
கப்பல்வாடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் பிளஸ் 2 மாணவர்கள் இருவர் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதில், கீழே விழுந்த கோபிநாத் என்ற மாணவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அவரை மருத்துவமனையில் ஆசிரியர்கள் அனுமதித்துள்ளனர்.
மாணவன் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியதையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments