நாளை நிச்சயம் நடக்கவிருந்த நிலையில், மகள் காதலனுடன் ஓட்டம்.. பெற்றோர் எடுத்த விபரீத முடிவு..

0 4716
கடலூர் மாவட்டம் வேளங்கிபட்டு கிராமத்தில் திருமணம் நிச்சயம் நடக்கவிருந்த நிலையில், மகள் காதலனுடன் சென்றுவிட்டதால் மனமுடைந்த பெற்றோர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டனர்.

கடலூர் மாவட்டம் வேளங்கிபட்டு கிராமத்தில் திருமணம் நிச்சயம் நடக்கவிருந்த நிலையில், மகள் காதலனுடன் சென்றுவிட்டதால் மனமுடைந்த பெற்றோர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டனர்.

சுந்தரமூர்த்தி- சுமதி தம்பதியின் 19 வயது மகள், சிதம்பரம் அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி., 3ஆம் அண்டு படித்து வந்த நிலையில், அவருக்கு  பெரியாண்டிக்குழியைச் சேர்ந்த இளைஞருடன் 20ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்தது.

இந்நிலையில், கடந்த 17ம் தேதி வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற சுந்தரமூர்த்தியின் மகள் வீடு திரும்பவில்லை. 2 ஆண்டுகளாக காதலித்து வந்த பால்ராஜ் என்பவருடன் மகள் சென்றது தெரியவந்ததால் மனமுடைந்த பெற்றோர் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments