தேவைக்கு அதிகமாக மருந்துகள் வாங்கி காலாவதியானதில் அரசுக்கு ரூ.27 கோடி இழப்பு - இன்பசேகரன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு

தேவைக்கு அதிகமாக மருந்துகளை வாங்கி காலாவதியாக்கி அரசுக்கு 27 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக, மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவை முன்னாள் இயக்குனர் டாக்டர் இன்பசேகரன் உள்ளிட்ட நான்கு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
2017-18ஆம் ஆண்டு மதுரை மண்டல நிர்வாக மருத்துவ அதிகாரியாக இருந்த டாக்டர் ஜான் ஆண்ட்ரூ, கண்காணிப்பாளர்கள் அசோக்குமார், அமர்நாத் ஆகியோர் அப்போதைய இயக்குநர் இன்பசேகரனுடன் சேர்ந்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
13 கோடி ரூபாய் அளவிற்கே மருந்துகளின் தேவை இருந்த நிலையில், 40 கோடி ரூபாய் அளவிற்கு போலி ஆவணம் தயாரித்து மருந்துகள் வாங்கியதும், மேலும், அதற்கு உடந்தையாக இருக்க மறுத்த மருத்துவ அதிகாரி கல்யாணி என்பவரை பணியிட மாற்றம் செய்ததும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Comments