பாகிஸ்தானில் 30 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் நீரில் மூழ்கி பலியான சோகம்!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் உயிரிழந்தனர்.
செஹ்வான் ஷெரீப்-பில் உள்ள புனித சூஃபி ஆலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று கைர்பூர் அருகே நெடுஞ்சாலையை ஒட்டிய 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அண்மையில் அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் அந்த பள்ளம் முழுவதும் வெள்ளநீர் தேங்கியிருந்தது. இந்த விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
Comments