சிறுத்தையை வேட்டையாடி தனது வீட்டின் மொட்டை மாடியில் அதன் தோலை காய வைத்த பெரும் அதிர்ச்சி சம்பவம்..!

தேனி மாவட்டம் அம்மாபட்டியில் முன்னாள் ஊராட்சி மன்ற கவுன்சிலர் துரைப்பாண்டியன் வீட்டின், மொட்டை மாடியில் வேட்டையாடப்பட்ட சிறுத்தையின் தோல் காய வைக்கப்பட்டிருந்தது குறித்து, வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒருவாரத்திற்கு மேலாக துரைப்பாண்டியனின் வீட்டு மாடியில் சிறுத்தையின் தோல் காயவைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையினர் அவரது வீட்டிற்கு சென்ற போது, துரைப்பாண்டியன் தலைமறைவானது தெரியவந்தது.
இதனையடுத்து, மாடியில் மஞ்சள் பூசப்பட்ட நிலையில் இருந்த சிறுத்தையின் தோலை பறிமுதல் செய்த வனத்துறையினர், இந்த சிறுத்தை எங்கே, எப்போது, யாரால் வேட்டையாடப்பட்டது? என விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே தேனி எம்.பி., ரவீந்திரநாத்திற்குச் சொந்தமான இடத்தில் சிறுத்தை இறந்தது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments