வளைகுடா நாடுகளுடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்ள இந்தியா நடவடிக்கை..!

வளைகுடா நாடுகள் ஒத்துழைப்பு கவுன்சிலுடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்வதற்காக இந்தியா வரும் 24 ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், ஓமன், பக்ரைன் ஆகிய 6 நாடுகள் கொண்ட கவுன்சிலுடன் மேற்கொள்ளப்படும் வர்த்தக ஒப்பந்தத்தால் இந்நாடுகளிலிருந்து கச்சா எண்ணை, இயற்கை எரிவாயுவை இந்தியா இறக்குமதி செய்யும் என்றும் முத்து, பட்டைதீட்டப்பட்ட கற்கள், உலோகங்கள், மின் இயந்திரங்கள், இரும்பு, எஃகு மற்றும் ரசாயனங்களை ஏற்றுமதி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments