மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்ததாக கூறி வீட்டில் இருந்த பெண்ணை கட்டிப்போட்டு கொள்ளை..!

0 5380

மதுரை மாவட்டம், மேலூர் அருகே தம்பதி போல் நடித்து வீட்டில் இருந்த பெண்ணை கட்டிபோட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சண்முகசுந்தரம் என்பவர் கத்தாரில் பணிபுரியும் நிலையில், கீழவளவில் மனைவி ஹேமலதா, மகன், மகள் ஆகியோர் வசித்து வருகின்றனர். நேற்று இரவு ஹேமலதா வீட்டில் தனியாக இருந்தபோது, தம்பதி என்று கூறி இரண்டு பேரும், இளம்பெண் ஒருவரும் வந்துள்ளனர்.

அதில் ஒருவர் தனது பெயர் குமார் என்றும், கத்தாரில் சண்முகசுந்தரத்துடன் பணிபுரிவதாகவும் கூறியுள்ளார்.

மகளின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க வந்துள்ளதாக கூறியவர்கள், தண்ணீர் கேட்ட நிலையில், எதிர்பாராத நேரத்தில் ஹேமலதாவின் கைகள் மற்றும் வாயை கட்டியுள்ளார்.

மேலும், எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து, அவர் அணிந்திருந்த நகை மற்றும் பீரோவில் இருந்த நகை என மொத்தம் 11 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், 70 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து தப்பியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments