மும்பை விமான நிலையத்தில் 32 கோடி ரூபாய் மதிப்புடைய 61 கிலோ தங்கத்தை பெல்டுகளில் மறைத்து வந்த 7 பேர் கைது..!

0 3029

மும்பை விமான நிலையத்தில் 32 கோடி ரூபாய் மதிப்புடைய 61 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, அதை கடத்தி வந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தான்சானியா நாட்டில் இருந்து வந்த 4  பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அதில் அவர்கள், பெல்டுகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து 53 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  இதே போல் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி துபாயில் இருந்து வந்த பெண் உள்ளிட்ட 3 பேரிடம் இருந்து 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments