உதகை அருகே அரிய வகை 2 கருஞ்சிறுத்தைகள் உலா வந்ததால் குடியிருப்பு வாசிகள் அச்சம்..!

0 3087

நீலகிரி மாவட்டம் உதகை அருகே அரிய வகை 2 கருஞ்சிறுத்தைகள் உலா வந்ததால் குடியிருப்பு வாசிகள் அச்சம் அடைந்தனர்.

மேல்கவ்ஹட்டி செல்லும் சாலையில் உள்ள மத்திய அரசின் வானியல் ஆராய்ச்சி மைய வளாகத்திற்குள் நேற்று இரவு 2 கருஞ்சிறுத்தைகள் நுழைந்தன.

கண்கள் பளிச்சிட அங்கும் இங்கும் நடந்து உணவு தேடிய சிறுத்தைகள், சிறிது நேரத்தில் வனத்திற்குள் சென்று விட்டன.

அரிய வகை 2 சிறுத்தைகள் உலா வந்த காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இதையடுத்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments