சென்னையில் சில பகுதிகளில் இரவில் இடுப்பளவுக்கு வெள்ள நீர் உயர்ந்ததால் மக்கள் அச்சம்..

சென்னை மாங்காடு ஓம் சக்தி நகர், சாதிக் நகர் உள்பட 10க்கும் மேற்பட்ட நகர் பகுதிகளில் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடியிருப்புகளால் புதிதாக அமைக்கப்பட்ட கால்வாயில் வெள்ளம் வடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை பகலில் மழை அளவு குறைந்த போதிலும் மற்ற பகுதிகளில் உள்ள மழை நீர் வடியவைக்கப்படுவதால் இரவில் இந்த பகுதிகளில் இடுப்பு அளவுக்கு மேல் வெள்ளம் சூழ்ந்து காணப்படுவதாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்.
அந்தப்பகுதிகளில் தேங்கிய மழை நீரை வடியவைப்பதற்கு தேவையான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments