தொழிலதிபர்களை ஏமாற்றி பணம் மோசடி வழக்கு - " நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை ஏன் கைது செய்யவில்லை. ? " டெல்லி நீதிமன்றம் கேள்வி..

0 3533

200 கோடி ரூபாய் மோசடி வழக்கில், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை கைது செய்யாமல் அமலாக்கத்துறை ஏன் பாரபட்சம் காட்டுகிறது? என டெல்லி நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், சில தொழிலதிபர்களின் குடும்பத்தினரை ஏமாற்றி 200 கோடி ரூபாய் பறித்த வழக்கின் துணை குற்றப்பத்திரிக்கையில், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நீட்டிக்குமாறு மனுத்தாக்கல் செய்தார்.

அவர் ஏற்கனவே நாட்டை விட்டு தப்பிக்க முயன்றதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

வாழ்நாள் முழுக்க உழைத்தாலும் தங்களால் 50 லட்ச ரூபாய் சேர்த்துவைக்க முடியாது, ஆனால் ஜாக்குலின் பெர்னாண்டஸோ 7 கோடி ரூபாயை ஊதாரித்தனமாக செலவு செய்துள்ளதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து, ஜாமீன் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பளிப்பதாகத் நீதிபதி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments