வாடகை வீடு விசாரிப்பது போல சென்று மூதாட்டியை கொலை செய்து 15 சவரன் நகை கொள்ளை- 2 பேர் கைது

0 1964

சேலத்தில் பெண்ணை கொலை செய்து நகை கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சின்னதிருப்பதி பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி ஹபீஸ்கானின் 82 வயது மனைவி நசீர்ஜஹான், வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இதனை தெரிந்துக் கொண்ட 2 பேர், வாடகை வீடு விசாரிப்பது போல சென்று, மூதாட்டியைத் தாக்கி 15 சவரன் நகையை கொள்ளையடித்தனர். பலத்த காயத்துடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நசீர்ஜஹான் இறந்தார்.

போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு சின்ன திருப்பதி முஸ்தபா, ஜான்சன் பேட்டை ராஜேந்திரனை கைது செய்தனர். மூதாட்டி குறித்து துப்பு கொடுத்த முஸ்தபாவின் சகோதரியை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments