நாளை சந்திர கிரகணம் - திருப்பதி கோவில் நடை 11 மணி நேரம் மூடல்..!

நாளை சந்திர கிரகணம்- திருப்பதி கோவில் நடை 11 மணி நேரம் மூடல்..!
சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை 11 மணி நேரம் மூடப்படுகிறது.
மதியம் 2.39 மணியில் இருந்து மாலை 6.29 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. அதையொட்டி நாளை காலை 8.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை நடை மூடப்படுகிறது.
அந்த நேரத்தில் கோவிலில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சந்திர கிரகணம் முடிந்ததும் இரவு 7.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டபிறகு, பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று வழிபட அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments