சாயல்குடி அருகே பெண்ணிடம் சங்கிலியை பறித்து தப்பியோடிய 2 பேர்.. காரில் 10 கி.மீ. விரட்டிச் சென்ற பிடித்த கிராம மக்கள்..!

0 2542
சாயல்குடி அருகே பெண்ணிடம் சங்கிலியை பறித்து தப்பியோடிய 2 பேர்.. காரில் 10 கி.மீ. விரட்டிச் சென்ற பிடித்த கிராம மக்கள்..!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்துவிட்டு பைக்கில் தப்பிய நபரை சுமார் 10 கிலோ மீட்டர் காரில் தூரம் விரட்டி சென்று பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்து காவல்துறையிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

வெட்டுக்காட்டைச் சேர்ந்த ராஜலட்சுமி, மளிகை கடைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது பைக்கில் வந்த 2 பேர்
சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.

அவரது அலறல் சத்தத்தை கேட்டு வந்த, இளைஞர்கள் சிலர் கார் மூலம் கிழக்கு கடற்கரை சாலையில் பத்து கிலோ மீட்டர் துரத்தியதில் பைக்கை சாலையில் போட்டுவிட்டு ஒருவன் தப்பியோட மற்ற ஒருவன் மட்டும் பிடிபட்ட நிலையில், கிராமத்திற்கு கூட்டிச்சென்று தர்ம அடி கொடுத்து ஊருக்கு நடுவே உள்ள கம்பத்தில் கட்டி வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

காவல்துறை விசாரணையில் கீழத்தூவலைச் சக்திவேல் என்பதும், தப்பியோடியது ராமநாதபுரத்தை சேர்ந்த விமல் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments