சாலையில் சென்ற காரில் திடீர் தீ விபத்து.. முன்கூட்டியே சுதாரித்துக் கொண்டதால் உயிர் சேதம் தவிர்ப்பு..!

0 3279

சென்னைஅடுத்த தாம்பரம் அருகே ஓடிக்கொண்டிருந்த காரில் புகை வந்ததுடன், திடீரென தீப்பற்றி எரிந்தது.

பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் தூத்துக்குடியில் நடைபெற்ற  உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு காரில் இன்று காலை வீடு திரும்பிக்கொண்டிருந்த போது  வாகனத்தில் அடைப்பு ஏற்படுவது போல இருந்ததால் வண்டியை நிறுத்திவிட்டார்.

அப்போது, காரின் முன்பக்கத்தில் புகை வந்ததுடன்,  சற்று நேரத்தில் வாகனம் தீப்பற்றி எரிந்தது. 

தகவலறிந்து 2 வாகனங்களில் வந்த தாம்பரம் தீயணைப்பு துறையினர்  ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 

வாகனத்தை விட்டு முன்கூட்டியே இறங்கியதால் 2 பெண்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் உயிர்தப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments