நம்ம புள்ளைக்கு விஷ ஊசி போட்டு கொண்ணுட்டாங்க மாமா..! மாணவியின் தாய் கண்ணீர்

0 5693

சென்னை மன்னடியில் உள்ள நேஷனல் மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுமி, தவறான சிகிச்சையால் உயிரிழந்துவிட்டதாக கூறி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ், வசந்தி தம்பதியினரின் ஒரே மகள் நந்தினி .

அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில்  பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி நந்தினி வயிற்று வலி  பிரச்சனை காரணமாக மண்ணடி பகுதியில் உள்ள நேசனல் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 சிறுமிக்கு அல்சர் பிரச்சனை இருப்பதாக கூறி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது. செவ்வாய்கிழமை இரவு செவிலியர்கள் சிறுமிக்கு  ஊசி ஒன்று போட்டதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு, உடல்நிலை மோசமானதால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட சிறுமி, சிறிது நேரத்தில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்ட நிலையில், 6 வருடங்கள் கழித்து பிறந்த ஒரே மகளை இழந்து விட்டதாக கூறி பெற்றோர் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது.

மருத்துவமனையில் இருந்து பெற்றோர் ஒப்புதல் இன்றி மாணவியின் சடலத்தை போலீசார் பிணக்கூறாய்வுக்கு எடுத்துச்செல்வதாக கூறி மாணவியின் தாய் அழுது கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

சிறுமியின் உயிரிழப்புக்காண காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments