குடியிருப்புப் பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது ஏறி பயமுறுத்திய நல்லபாம்பு..!

ஈரோடு மாவட்டத்தில் குடியிருப்புப் பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது ஏறி பயமுறுத்திய நல்லபாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெரியாநர் நகர் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் நல்லபாம்பு ஒன்று முட்டையிட்டு, சட்டையை உரித்துப் போட்டிருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் பாம்பு பிடிக்கும் நபருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு வந்த யுவராஜ் என்பவர் பாம்பை பிடிக்க முயற்சித்தபோது தப்பி இருசக்கர வாகனத்தின் மீது ஏறி அச்சுறுத்தியுள்ளது. ஒருவழியாக பாம்பு பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Comments