மின்சாரம் தாக்கி எல்லை பாதுகாப்புப்படை வீரர் உயிரிழப்பு - ராணுவ மரியாதையுடன் உடல் தகனம்...!

0 3839

மேற்கு வங்கத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரரின் உடல், ராணுவ மரியாதையுடன் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

கூடலூரைச் சேர்ந்த கொடியரசன் என்பவரின் மகன் 31 வயதான கெளதம்,  9 வருடங்களாக எல்லை பாதுகாப்பு படையில் சிவில் எலக்ட்ரிசியன் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 28-ந்தேதி மேற்குவங்கத்தின் டாங்கிபிரா பகுதியில் பணியில் இருந்தபோது மின்சாரம் தாக்கியதில், கெளதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது உடல், சொந்த ஊரான தேனி கூடலூருக்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன், அரசு மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments