ரூ.18.34 கோடி மதிப்பு தங்கத்தை மதுரை கொண்டு செல்ல முயன்ற 3 பேர் கைது..!

0 9650

தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட சுமார் 18 கோடி ரூபாய் மதிப்பிலான 35.6 கிலோ கடத்தல் தங்கத்தை சென்னை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் பறிமுதல் செய்தது.

கடந்த 27ம் தேதி, ராமநாதபுரத்தில் இருந்து 3 பேர் ஒரு காரில், சாலை மார்க்கமாக கடத்தல் தங்கத்தை மதுரைக்கு கொண்டு செல்ல முயன்றுள்ளனர்.

ரகசிய தகவலின் பேரில், மதுரை அருகேயுள்ள சுங்கச்சாவடியில் காரை மடக்கிப் பிடித்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், மூவரையும் கைது செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments