தேர்தல் முன்பகை காரணமாக பேன்சி ஸ்டோருக்குள் புகுந்து ஊழியரை தாக்கிய 6 பேர் கைது..!

0 1994

புதுக்கோட்டையில் பேன்சி ஸ்டோருக்குள் புகுந்து, தேர்தல் முன்பகை காரணமாக, ஊழியரை தாக்கிய 6 பேரை போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

பெரியார் நகரில் பாலமுருகன் என்பவர் நடத்தி வரும் பேன்சி ஸ்டோரில் கோபாலகிருஷ்ணன் வேலை பார்த்து வருகிறார்.

இவர் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று, தற்போது நகர்மன்ற உறுப்பினராக உள்ளவருக்கு எதிராக, தேர்தலில் போட்டியிட்ட நபருக்கு, ஆதரவாக, வேலை செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பேன்சி ஸ்டோருக்குள் புகுந்து கோபாலகிருஷ்ணனை தாக்கிய அரவிந்தன், ரஞ்சித், கெளதம்வர்மன், வினோஜன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments