கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது

0 1670

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நெல்லையிலும் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைதான நிலையில், ஜமேஷா முபினின் உறவினரான அப்சர் கானை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.

இதையடுத்து, வழக்கு தொடர்பாக நெல்லையில் முகமது உசேன் லெப்பை என்பவரின் இல்லத்தில் சோதனையிட்ட போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments