சார்லஸ் - டயானா திருமண கேக் ஏலத்தில் விற்பனை - 41 ஆண்டுகளாக கேக்கை பதப்படுத்தி வைத்த முதியவர்.!

40 ஆண்டுகளுக்கு முன், சார்லஸ் - டயானா திருமணத்தின்போது பரிமாறப்பட்ட கேக் துண்டு ஒன்று ஏலத்தில் விடப்படுகிறது.
1981ம் ஆண்டு மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த அரச குடும்ப திருமணத்தில் பங்கேற்ற 3,000 விருந்தினர்களுள் ஒருவரான நிகெல் ரிக்கெட்ஸ், தனக்கு பரிமாறப்பட்ட திருமண கேக்கை, 41 ஆண்டுகளாக பதப்படுத்தி வைத்துள்ளார்.
கடந்தாண்டு அவர் உயிரிழந்த நிலையில், தற்போது இந்த கேக் ஏலத்தில் விற்கப்பட உள்ளது.
இதற்கு முன் கடந்த 2014ம் ஆண்டு, அதே திருமணத்தில் பரிமாறப்பட்ட கேக் துண்டு, ஒன்றேகால் லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையானது.
Comments