சென்னையில் அதிமுக போராட்டம்.. இபிஎஸ் உள்ளிட்டோர் கைது.. சபாநாயகர் மீது இபிஎஸ் குற்றச்சாட்டு

0 3170

சட்டப்பேரவை துணைத் தலைவர் பதவி விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு நடுநிலையோடு செயல்படவில்லை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவுக்குட்பட்டு ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கை சட்டப்பேரவையில் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து, கருப்புச் சட்டை அணிந்து வந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள், மற்றும் நிர்வாகிகள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்களை கைது செய்து பேருந்தில் அழைத்து சென்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் போலீசார் தங்க வைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments