பணம் மற்றும் நகைகளை வாங்கி திருப்பித் தராமல் ஏமாற்றிய வங்கி மேலாளர் கைது..!

சிவகங்கை மாவட்டத்தில் பணம் மற்றும் நகைகளை வாங்கி திருப்பித் தராமல் ஏமாற்றியதாக வங்கி மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேவகோட்டை பரோடா வங்கி மேலாளராக இருக்கும் பாலகிருஷ்ணன், தனது நண்பரான சையது என்பவரிடம் ரூபாய் 36 லட்சம் பணம், 50 பவுன் நகைகளை வாங்கியதாக கூறப்படுகிறது.
ஓராண்டிற்கு மேலாகியும் திருப்பித் தராமல் ஏமாற்றிய நிலையில் சையது சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யிடம் புகாரளித்துள்ளார்.
இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடைபெற்று வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments