மகாராஷ்டிராவில் ரயில் நிலைய நடைமேடையில் ஆட்டோ இயக்கிய நபர் கைது..!

0 2761
மகாராஷ்டிராவில் ரயில் நிலைய நடைமேடையில் ஆட்டோ இயக்கிய நபர் கைது..!

மகாராஷ்டிராவில் ரயில் நிலைய நடைமேடையில் ஆட்டோவை ஓட்டிச் சென்ற நபரை கைது செய்த ரயில்வே போலீசார், ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

மும்பை அடுத்த குர்லா நகர் பகுதியிலுள்ள ரயில் நிலையத்தில், பயணிகள் வந்து செல்லும் நடைமேடைக்கு கடந்த 12-ந்தேதி ஆட்டோ ஒன்று வந்துள்ளது.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலான நிலையில், பயனாளர்கள் பலர், காவல்துறையின் கவனத்திற்கு வீடியோவை கொண்டு சென்றனர்.

ஆட்டோவின் பதிவு எண்ணை கொண்டு அதன் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். இது பற்றிய வீடியோவையும் ரயில்வே போலீசார் டுவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments