இந்தியாவும் சீனாவும் தான் ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடுகள் - ரஷ்ய அதிபர் புதின்

இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவின் நெருக்கமான நட்பு நாடுகள் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
கஜகஸ்தான் தலைநகரான அஸ்தனாவில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய புதின், ஆசியாவின் இரு பலம் மிக்க நாடுகள் உக்ரைன் பிரச்சினையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும்படி கூறி வருவதாகவும் புதின் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடன் பேசிய போது இது போருக்கான காலம் அல்ல என்று கூறியிருந்தார். இந்தியா,சீனா ஆகிய நட்பு நாடுகளின் உக்ரைன் போர் குறித்த நிலைப்பாடு நன்கு தெரியும் என்றும் புதின் தெரிவித்துள்ளார்.
Comments