குடும்ப விபரங்களை நண்பரிடம் பகிர்ந்ததால் ஏற்பட்ட விபரீதம்.. மன உளைச்சலால் பெண் தற்கொலை.. பேருந்து ஓட்டுநர் கைது!

0 4023

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் தற்கொலை வழக்கில் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காரியாவிளை பகுதியைச் சேர்ந்த சஜிலா என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சுபின் என்பவர் நண்பராகியுள்ளார்.

சஜிலா தனது குடும்ப விபரங்களையும் தனது கணவரின் குடிப்பழக்கம் குறித்தும் அவரிடம் கூறியதை சாதகமாக பயன்படுத்திய சுபின் அப்பெண்ணிடம் தன்னை மறு திருமணம் செய்யும்படி அடிக்கடி தொந்தரவு செய்ததாகக்கூறப்படுகிறது.

சஜிலா இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் குடிபோதையில் அவரிடம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் மன உளைச்சலுக்குள்ளான சஜிலா தற்கொலை செய்து கொண்ட நிலையில் சுபினை போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments