தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...

0 2201

கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, வானிலை மையம் தெரித்துள்ளது.

இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நாமக்கல், சேலம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், நாளை டெல்டா மாவட்டங்கள் உட்பட 26 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

வரும் 15ம் தேதி வரை, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம், சென்னையில் ஒரு சில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments