இருக்கை கழன்றதால், அரசு பேருந்திலிருந்து வெளியே விழுந்த பயணி..!

குமரி மாவட்டம், மார்த்தாண்டத்திலிருந்து புறப்பட்ட அரசு பேருந்தில் இருக்கை கழன்றதால் அதில் அமர்ந்திருந்த பயணி பேருந்திலிருந்து வெளியே விழுந்தார்.
பின்பக்க படிகட்டு அருகே இருந்த இருக்கை திடீரென கழன்று பின்புறமாக சாய்ந்ததால் அதில் அமர்ந்திருந்த செல்வராஜ் என்பவர் நிலைதடுமாறு வெளியே விழுந்ததாக கூறப்படுகிறது.
படுகாயமடைந்த செல்வராஜை சக பயணிகள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
Comments