நிலத்தகராறு : அரிவாள், மண்வெட்டியுடன் ரகளையில் ஈடுபட்ட பெண் கைது..!

0 3075
நிலத்தகராறு : அரிவாள், மண்வெட்டியுடன் ரகளையில் ஈடுபட்ட பெண் கைது..!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே நிலத் தகராறில் அரிவாள் மற்றும் மண்வெட்டியுடன் ரகளையில் ஈடுபட்ட கணவன்-மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்குடியை சேர்ந்த நாராயணசாமி என்பவரது நிலத்தில் ராஜேந்திரன் என்பவர் விவசாயம் செய்து வந்தார்.

தந்தை உயிரிழந்ததை தொடர்ந்து சொந்த ஊருக்கு திரும்பிய அவரது மகன் ஜெகன், ராஜேந்திரனிடம் நிலத்தை பெற்று தன் பெயரில் பட்டாவை மாற்றியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ராஜேந்திரனும் உயிரிழந்ததால் அவரது மகள் கௌதமி, தன்னுடைய நிலம் எனக்கூறி ஜெகனிடம் தகராறில் ஈடுபட்டு மண்வெட்டி கொண்டு அவரை தாக்க முயன்றார்.

இது தொடர்பான காட்சிகள் வைரலான நிலையில், ரகளையில் ஈடுபட்ட கௌதமி மற்றும் அவரது கணவர் அசாருதீன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments