பள்ளி மாணவிகள் தங்கள் ஹிஜாப்களை கழற்றி அரசுக்கு எதிரான போராட்டம்..!

ஈரானில் பள்ளி மாணவிகள் தங்கள் ஹிஜாப்களை கழற்றி எறிந்து அரசுக்கு எதிரான போராட்டம் நடத்தினர்.
சர்வாதிகாரி அழியட்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர். ஹிஜாப் அணிய மறுத்த 22 வயதான மாஷா அமினியின் லாக்கப் மரணத்தையடுத்து ஈரான் போலீசாருக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்ட போதும் பள்ளி மாணவிகள் எதிர்ப்பை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீதிகளில் விடுதலைப் பாடல்களைப் பாடியபடி பெண்கள் போராட்டம் நடத்திய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
Comments