வாக்குறுதிக்கான நிதி ஆதாரம் - பதிலளிக்க கோரிய தேர்தல் ஆணையம்...

0 1849

தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கும் அரசியல் கட்சிகள் அதற்கான நிதி ஆதாரங்கள் குறித்த விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இதுகுறித்து வரும் 19ம் தேதிக்குள் அரசியல் கட்சிகள் பதில் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

எந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமோ அதையே அரசியல் கட்சிகள் மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் அறிக்கைகள் உருவாக்குவது அரசியல் கட்சிகளின் உரிமை என்றாலும், வெற்று வாக்குறுதிகளால் விரும்பத்தகாத தாக்கங்கள் ஏற்படுவதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments