சுடச்சுட 'பிரெஞ்ச் பிரைஸ்' பொரிக்கும் கை வடிவ ரோபோ 'பிளிப்பி - 2' அறிமுகம் ..!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், சுடச்சுட பிரெஞ் பிரைஸ் பொரித்தெடுக்கும் ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மூலம், கடந்த 5 ஆண்டுகளாக கை வடிவில் உருவாக்கப்பட்ட அந்த ரோபோ-விற்கு பிளிப்பி என பெயரிடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் அளிக்கும் ஆர்டர்கள் அந்த ரோபோ-விற்கு அனுப்பப்படுகிறது. அதில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் பிரிட்ஜில் உள்ள உணவு பொருட்களை சரியாகத் தேர்வுசெய்து, வானலியில் இட்டு, வெப்பநிலைக்கு ஏற்ப பக்குவமாக பொரித்தெடுத்து விடுகிறது.
கொதிக்கும் எண்ணெய் சட்டி அருகே நின்றபடி சமையலர்கள் சிரமப்படுவதை தவிர்க்க பிளிப்பி டூ என்ற இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
Comments