சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்க வரிச் சலுகை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு..!

0 2072

உள்நாட்டு விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வகையில், சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்க வரிச் சலுகை அடுத்தாண்டு மார்ச் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கச்சா பாமாயில், சோயா பீன் எண்ணெய், கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் மீது தற்போதுள்ள வரிச்சலுகை மாற்றமின்றி நீடிக்கும் என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய விலையின் வீழ்ச்சி மற்றும் இறக்குமதி வரி குறைப்பு ஆகியவற்றால் இந்தியாவில் சமையல் எண்ணெயின் சில்லறை விற்பனை விலை கணிசமாக குறையக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments