8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த அஸ்ஸாமைச் சேர்ந்த நபருக்கு சாகும் வரை சிறை தண்டனை..!
8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த அஸ்ஸாமைச் சேர்ந்த நபருக்கு சாகும் வரை சிறை தண்டனை..!
சிவகாசி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அஸ்ஸாமைச் சேர்ந்த மஜும் அலிக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கி ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2020 ஆண்டு சிவகாசி கொங்கலாபுரத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்க சென்ற நிலையில் மறுநாள் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது உறுதியானது.
நூல் பை கம்பெனியில் வேலை பார்த்து வந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜும் அலி தான் கொலையாளி என தெரிவந்ததையடுத்து கைது செய்த போலீசார், 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தினர்.
இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ணா ஜெயானந்த், மஜும் அலிக்கு சாகும் வரை சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்தார்.
Comments