சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, நாளை முதல் வரும் 23ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும், சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ள வானிலை மையம், தென் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.
Comments