இளம்பெண் உயிரிழந்ததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு - 5 பேர் உயிரிழப்பு!

0 2015

ஈரானில், போலீஸ் காவலில் இளம்பெண் உயிரிழந்ததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

ஹிஜாப் முறையாக அணியாததால் கைது செய்யப்பட்ட 22 வயதான மஹ்சா அமினி என்ற பெண் கோமா நிலைக்கு சென்று உயிரிழந்தார்.

இதனைக் கண்டித்து தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. உயிரிழந்த அமினியின் சொந்த ஊரான சாகேஸில் போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

அதே போல, டிவந்தர்ரே நகரில் இருவரும், டெஹ்கோலனில் ((Dehgolan)) ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments