அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அசோக் கெலாட் - சசி தரூர் மோதல்?

0 1722

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அசோக் கெலாட் மற்றும் சசி தரூர் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்னும் 3 நாட்களில் தொடங்குகிறது.

ராகுல்காந்தி போட்டியிட ஆர்வம் காட்டாததால் கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக காந்தி குடும்பம் அல்லாத ஒருவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், முன்னாள் மத்திய இணையமைச்சர் சசி தரூர் ஆகியோர் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார்கள் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments